குட்டீஸ் நலம்
இந்திய குழந்தைகள் நலக் கழகம் தமிழ்நாடு கிளையின் பெற்றோருக்கான மின்னணு வழிக்காட்டுதல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
குழந்தைகளை ஆரோக்கியமாக, அறிவாளியாக வளர்க்க வேண்டும் என்ற உங்கள் பேராவலுக்கும், நீண்டகால தேடலுக்கும், தீர்க்கமான முனைப்பிற்குமான அறிவியல் சார்ந்த சரியான வழிகாட்டுதல் மற்றும் தீர்வு தரும் களம் இது.
குழந்தைகள் நலனில் உங்களின் தேவை அறிந்து, குழந்தை நல நிபுணர்களால் கட்டமைக்கப்பட்ட பிரத்யேக இடத்தில் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த தளத்தில் உங்களுக்கு நாங்கள் குழந்தை நலனுக்கான மகத்தான அறிவுரைகளோடு நிறுத்தி விடாமல், குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு தேவையான தொடர் ஆதரவையும், நட்பான கருத்து மற்றும் அனுபவ பரிமாற்றங்களையும் வழங்குவதன் மூலம் உங்கள் குழந்தையின் நலனுக்காக உங்களோடு கைக்கோர்த்து பயணிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
குழந்தை வளர்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் நடத்தை பற்றிய குறிப்புகள் முதல் குழந்தைகள் நலனைப் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடைத் தந்து உங்களுக்கு உதவிடவும், பெற்றோராக குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு பக்கபலமாகவும் வருவதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
வாருங்கள்.. எங்களோடு இணைந்திடுங்கள்..
விவரமான, பரிவு மிகுந்த குழந்தை வளர்ப்பிற்கான அடித்தளத்தை உருவாக்குவோம். அது நம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை அழகாக வடிவமைக்க உதவும்.
குழந்தை வளர்ப்பின் அனுபவங்களை ஆனந்தமாய் கொண்டாட, உங்களுக்கு உற்ற உறுதுணையான வலைதளத்திற்கு வருக, வருக என வரவேற்று மகிழ்கிறோம்.
Office Bearers
-
Dr.K.U.Suresh Balan
President -
Dr. V. Tiroumourougane Serane
Secretary -
Dr.R.V.Dhakshayini
Treasurer